அன்பார்ந்த வட தமிழ் சங்க உறுப்பினர்களே மற்றும் தமிழ் நண்பர்களே,
வட தமிழ் சங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று ஐக்கிய ராஜ்யத்தில் நமது சங்கத்தின் வாயிலாக தமிழ் சமுதாயத்தின் ஒரு குரலாக ஒலிப்பதில்  நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தீபாவளி கொண்டாட்டம், தமிழ் பள்ளிகளுக்கான பேச்சுப் போட்டி மற்றும் சித்திரை திருவிழா ஆகிய மூன்று  நிகழ்ச்சிகளும் நமது சங்கத்தின் செயல்பாட்டில் தற்போது உள்ளன. இது மட்டுமன்றி,  நமது சங்கத்தில் வருடம் இருமுறையாவது பற்பல அறப்பணிகளுக்கு நிதி உதவி செய்து வருவதை நான் கனிவுடன்  தெரிவித்துக் கொள்ள  விரும்புகிறேன். இது மட்டுமல்லாமல், வருடத்திற்கு  ஐந்து தமிழ் பள்ளிகளுக்கான ஊக்கத்தொகையும் வட தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்படுகிறது. வட தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை சிறப்பாக செய்து வந்த முந்தய  குழுவின் தலைவரான திரு நாச்சியப்பன் அவர்களுக்கும் மற்றும் அவரது அனைத்து குழுவினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்குறோம்.  இது போன்ற பணிகளுக்கும், மேலும் பல புது முயற்சியிலும் ஈடுபட தங்களது உதவியையும், ஒப்புதலையும் நாடுகிறேன்! மேலும் எம்முடன் அன்புடனும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் பணிபுரியவிருக்கும் எங்கள் குழுவினரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன் .
துனை தலைவர்- திரு ராம் விநாயகம் அவர்கள்
செயலாளர்- திரு சிவபாலன் பாலச்சந்திரன் அவர்கள்
துணை செயலாளர்- திரு அசோக் இளையபெருமாள்
பொருளாளர்- திருமதி பிரியா நாராயணன் அவர்கள்
தாங்களோ, தங்களுக்கு தெரிந்தவர்கள் எவரும் வட தமிழ் சங்கத்தில் சேர விருப்பமெனில் தயவுகூர்ந்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது  நேரடியாக கைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.
 
அன்புடன்,
திரு மதன் திருஞானம்
தலைவர்
வட தமிழ்ச் சங்கம்
தமிழ் மக்களுடன், ஆங்கில கலப்பின்றி தமிழில் பேச முயற்சிக்கவும்!
நெகிழி (Plastic) தவிர்க்கவும்!
தமிழ் காப்போம்!! இயற்கை காப்போம்!!
Dear Members of Northern Tamil Association (NTA) & other Tamil speaking friends,
I am extremely delighted & excited to take up the presidential role for our Association in addition to being the voice of our tamil community in the U.K. We currently have three scheduled events including the Deepavali kondattam (October 19th 2019), Tamil schools public speaking competition (Paechu Potti) & Chithirai Thiruvizha (dates to be confirmed). We also donate generously to various charities at least twice a year from the money collected through these events. We are also pleased to inform that we provide bursaries to five different tamil schools within the U.K. We are indebted to the able leadership of Dr Nachiappan & his team, for successfully running these events & charitable donations.
I wish to continue with the good work along with attempting some newer developments in the forthcoming year for which I request your support & help. We have a dynamic & friendly volunteer team to help out with the tasks next year.
Vice- president: Mr Ram Vinayagam
Secretary: Mr Sivabalan Balachandran
Joint Secretary: Dr Ashok Elayaperumal
Treasurer: Mrs Priya Narayanan
Please do let us know if you or your friends or family members would like to join the NTA.
Email: president@northerntamilassociation.org.uk
Phone: +44 7523 164 333
Kindly converse in unadulterated Tamil to your Tamil speaking friends!
Avoid Plastic!
Save Tamil! Conserve Nature!